சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மேல சண்முகபுரம் பகுதியில் ஆரோன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் ஆரோன் அதே பகுதியில் வசிக்கும் 9 வயதுடைய சிறுமி ஒருவர் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருக்கும் போது அங்கு சென்று சிறுமியிடம் பேசியுள்ளார். இதனையடுத்து ஆரோன் திடீரென அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதனால் அந்த சிறுமி அழுது கொண்டே நடந்த சம்பவங்களை அனைத்தையும் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் படி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்த காவல்துறையினர் உடனடியாக ஆரோனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.