இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் நடராஜனின் வாழ்க்கை படமாக உருவாகுமா என்ற சந்தேகத்திற்கு தற்போது விடை கிடைத்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக திகழ்பவர் சேலத்தை சேர்ந்த நடராஜன். இவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் வலைப் பந்துவீச்சாளராக சென்றார். அங்கு தனது திறமை மற்றும் கடின உழைப்பு மூலம் ஒரு நாள், 20 ஓவர் , டெஸ்ட் கிரிக்கெட்டில் களமிறங்கி விளையாடினார்.
இதனால் இந்திய ரசிகர்களின் கவனம் நடராஜனின் பக்கம் சென்றது. போட்டித்தொடரில் வெற்றி பெற்று தனது சொந்த ஊருக்கு திரும்பிய நடராஜனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் நடராஜன் பேட்டி ஒன்று அளித்தார். அதில் ,” எனது வாழ்க்கையை படமாக எடுக்க சில இயக்குநர்கள் என்னை அணுகினார்கள். ஆனால் எனக்கு அதில் ஆர்வம் இல்லை. தற்போது என் கவனம் முழுவதையும் கிரிக்கெட்டில் செலுத்த ஆசைப்படுகிறேன்” என்று கூறியுள்ளார்.