Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி…. வழக்கறிஞர்களின் போராட்டம்…. கன்னியாகுமரியில் பரபரப்பு….!!

நீதிமன்றம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக நடந்த பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி சென்னை வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி மீது அளிக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரியும், வழக்கறிஞர்கள் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பு போராட்டம் நடைபெற்றது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் நீதிமன்றம் முன்பு நடந்த கண்டன போராட்டத்திற்கு வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் மரிய ஸ்டீபன் தலைமை தாங்கினார்.

இதில் சங்கச் செயலாளர் டி.கே. மகேஷ், பொருளாளர் விஸ்வராஜன், துணை தலைவர் பிரதாப், நூலகர் செந்தில் மூர்த்தி மற்றும் 100-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். இந்தப் போராட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் தங்களது கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து பூதப்பாண்டியில் வழக்கறிஞர் சங்கத் தலைவர் பலவேசம் முத்து தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோன்று இரணியல், பத்மனாபபுரம், குழித்துறை போன்ற நீதிமன்றங்கள் முன்பும் போராட்டம் நடைபெற்றது.

Categories

Tech |