Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி…!! “மாணவி குளிப்பதை செல்போனில் படமெடுத்த மாணவன்”… அவன் நல்ல பையன்… மாணவனுக்கு ஆதரவாக பேசும் போலீஸ்…!!

கனடாவில் வழக்கை விசாரித்த காவல்துறை அதிகாரி திடீரென்று  வழக்கில் பின்வாங்கியதால் புகாரளித்த பெண் ஏமாற்றமடைந்துள்ளார். 

கனடாவிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவின் Okanagan என்ற பல்கலைக்கழகத்தில் Taylor என்ற  மாணவி பயின்று வருகிறார். இந்நிலையில் அவர் குளித்துக் கொண்டிருக்கும் போது குளியலறையில் கல்லூரியில் பயிலும் Sari Siyam என்ற மாணவர் தனது செல்போனை வைத்து  குளிப்பதை படம் எடுத்துள்ளார். இதனை கவனித்த Taylor –  Siyam-ஐ கையும் களவுமாக பிடித்துக் கொண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

முதலில் வழக்கை நேர்மையாக விசாரித்து வந்த காவல்துறை அதிகாரி திடீரென்று  வழக்கில் பின்வாங்க தொடங்கியுள்ளார். அவர், ” Siyam ஒரு நல்ல மாணவன். அவன் நல்ல குடும்பத்தை சேர்ந்த பையன். பொறியியல் படித்து வருபவன் மீது இப்படி ஒரு வழக்கு தொடரப்பட்டால் வேலையே கிடைக்காது ” என்று Taylor-ரிடம் கூறியிருக்கிறார்.

மேலும் Taylor வழக்கு தொடர்பாக பேசுவதற்காக அந்த காவல்துறை அதிகாரிக்கு செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பினாலோ அல்லது போன் செய்தாலோ அவர் சரியான பதில் அளிப்பதே இல்லையாம். இதனால் Taylor இந்த வழக்கை வேண்டாம் என்று முடிவுக்கு வந்துள்ளார். ஆனால் பல்கலைக்கழக ஊழியர்கள் இந்த வழக்கை அப்படியே விடக்கூடாது Siyam-க்கு சரியான தண்டனை வழங்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தால் தற்போது மற்றொரு காவல்துறை அதிகாரி அந்த வழக்கிற்கு பொறுப்பேற்றுள்ளார்.

Categories

Tech |