தூத்துக்குடி மாவட்டத்தில் அங்க நாயக்கன்பட்டி கிராமத்தில் ஆண்டுதோறும் சுடலைமாடசாமி கோவில் திருவிழா நடைபெறும். அந்தத் திருவிழாவில் பிரமிளா என்பவரின் குடும்பத்தினர் மட்டும் சாமியாடி வந்துள்ளனர். இதையடுத்து இந்த ஆண்டு அதே ஊரைச் சேர்ந்த இசக்கிராஜா என்பவர் திடீரென சாமி வந்து ஆடினர்.
அதன் பிறகு பிரமிளா சாமி வந்தது போல் ஆடி இசைக்கி ராஜாவை தாக்கியுள்ளார். அதன் பிறகு கொம்பை வாங்கி வந்து தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பிரமிளாவின் சகோதரர் மற்றும் உறவினர்கள் மீது இசக்கிராஜா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் 4 நபர்களின் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.