உளவு பார்த்ததாக கூறி கைது செய்யப்பட்ட இந்திய கடற்படையினுடைய முன்னாள் அதிகாரியின் வழக்கு தொடர்பான விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
பாகிஸ்தானில் உளவு பார்த்ததாகக் கூறி, இந்திய கப்பற்படையின் முன்னாள் அதிகாரியான குல்பூஷனை அந்நாட்டு ராணுவத்தினர்கள் கைது செய்துள்ளனர். மேலும் பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் குல்பூஷனுக்கு 2017ஆம் ஆண்டு மரண தண்டனையை விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்தியா, பாகிஸ்தானிலிருக்கும் சர்வதேச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டை தாக்கல் செய்துள்ளது.
இதற்கு சர்வதேச நீதிமன்றம் குல்பூஷனிண் மரண தண்டனையை நிறுத்தி வைத்ததோடு மட்டுமல்லாமல் அவரை சந்திப்பதற்கும் இந்திய அரசாங்கத்திற்கு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் குல்பூஷணிற்கு ஆதரவாக ஒரு வக்கீலை நியமிப்பதற்கு அரசு தரப்பில் முறையிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கு தற்போது இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது பாகிஸ்தானை சேர்ந்த வக்கீலின் வேண்டுகோளை தொடர்ந்து, இந்த விசாரணையை நீதிபதி ஒத்தி வைப்பதாக உத்தரவிட்டுள்ளார்.