Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல்…. 4 பேர் மீது வழக்கு பதிவு…. போலீஸ் விசாரணை….!!

இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் திருநங்கைகள் உள்பட 4 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தொண்டிகரடு பகுதியில் திருநங்கைகளான ஹரிணி, மேத்தா, பவுர்ணமிகா ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்கள் 3 பேரும் திருச்செங்கோடு காய்கறி மார்க்கெட்டில் தேங்காய் வியாபாரியான, தங்கராஜ், மணி, கந்தசாமி ஆகியோரை தாக்கியுள்ளனர். மேலும் தேங்காய்களை கீழே போட்டும் உடைத்துள்ளனர்.

இதுகுறித்து தங்கராஜ் திருச்செங்கோடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதேபோன்று திருநங்கை ஹரிணி, தங்கராஜ் தன்னை தாக்கியதாக கூறி புகார் அளித்துள்ளார். அந்த 2 புகாரின்பேரில் திருநங்கைகளான ஹரிணி, மேத்தா, பவுர்ணமிகா மற்றும் தங்கராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |