Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“வளர்ச்சி திட்ட பணிகள்” 28 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைச்சிருக்கோம்…. ஊராட்சி மன்ற தலைவரின் தகவல்….!!

கூடூர் ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருவதாக ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள கூடூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமி குமார் தலைமையில் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றது. அதாவது நாராயணமங்கலம் திருவாச குளத்தில் 2 படித்துறை கட்டப்பட்டு இருக்கின்றது. இதனையடுத்து மொச குளம் பகுதியில் இருந்து கீழத்தெரு வரை 1.5 கிலோ மீட்டருக்கு 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கப்பட்டு இருக்கின்றது.

அதன்பின் மாரியம்மன் கோவில் தெருவில் 6.86 லட்சம் ரூபாயிலும், நாராணமங்கலத்தில் இருந்து தப்பளாம்புலியூர் வரை 4 கிலோமீட்டர் தூரத்திற்கு 2.36 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் தார் சாலைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றது. அதேபோன்று ஊராட்சி பகுதியில் 4 இடங்களில் உயர்கோபுர மின் விளக்குகள் 12 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு இருக்கின்றது. மேலும் கொரோனா தடுப்பூசி முதல் தவணையாக 200 நபர்களுக்கு செலுத்தப்பட்டு இருப்பதாக ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |