செங்கல்பட்டில் வளர்ச்சி சிறப்பு திட்ட பணிகளை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் பொறியியல் துறையுடன் சேர்ந்து மாவட்ட வளர்ச்சிக்கான சிறப்பு திட்ட பணிகளை கலெக்டர் ராகுல் நாத், வேளாண்மை இணை இயக்குனர் சுரேஷ், துணை இயக்குனர் ஏழுமலை போன்றோர் ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வின் போது வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் புதிதாக மாவட்டத்தில் தொடங்கப்பட்ட திரவ உயிர் உரங்களை உற்பத்தி பரிசோதனை நிலையத்தை நேரில் சென்று பார்வையிட்டு உயிர் உரங்களின் உற்பத்தி பரிசோதனை மற்றும் முக்கியத்துவம் விவசாயிகளுக்கு சென்றுள்ள விவரங்களை காட்டாங்கொளத்தூர் வேளாண்மை உதவி இயக்குனர் ரவீந்திரா எடுத்துரைத்துள்ளார்.
இதனையடுத்து வேளாண்மை உழவர் நலத்துறையில் இயங்கிவரும் களப்பணியாளர்களின் விவரங்களை அதிகாரிகள் கேட்டறிந்து திருக்கழுக்குன்றம் வட்டம் கீரப்பாக்கம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள நெல் சிஒ-51 விதைப்பண்ணையில் ஆய்வு செய்து அங்கு திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பங்களை விவசாயிகளுடன் கலந்துரையாடினர். அதன்பின் தோட்டக்கலைத் துறையில் செயல்பட்டு வரும் ஆத்தூரில் உள்ள மாநில தோட்டக்கலை துறை பண்ணையையும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அங்கு தோட்டக்கலை துறை துணை இயக்குனர் சாந்தா செலின் மேரி, உதவி இயக்குனர் சிவக்குமார் ஆகியோருடன் காய்கறி, பழவகைகள் நாற்றுப்பண்ணையும் பார்வையிட்டு ஆலோசனை கொடுத்துள்ளார்.