Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பல லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு…. நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகள்…. கலெக்டரின் திடீர் ஆய்வு…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் வளர்ச்சித் திட்ட பணிகள் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வளர்ச்சித் திட்ட பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இதனையடுத்து ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் பாரதி நகர் பகுதியில் 8.58 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய், தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி போன்றவற்றை கலெக்டர் ஆய்வு செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து குளித்சோலையில் 14-வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சாலை, தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாட்டு நிதியின் கீழ் தொட்டபெட்டா ஊராட்சியில் மேம்படுத்தப்பட்டுள்ள சாலை போன்றவற்றை கலெக்டர் ஆய்வு செய்துள்ளார். இந்த ஆய்வின் போது கலெக்டருடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கெட்சி லீமா மற்றும் பிற அலுவலர்கள் இருந்தனர்.

Categories

Tech |