வளர்ச்சித் திட்ட பணிகளை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.
ராணிபேட்டை மாவட்டத்திலுள்ள சயனபுரம் ஊராட்சியில் கட்டப்பட்டு வருகின்ற மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் அசநெல்லிகுப்பம் ஊராட்சியில் கட்டப்பட்டு வருகின்ற அங்கன்வாடி மையம் உள்ளிட்ட வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.
இதில் பணிகளைத் தரமாகவும், மிக விரைவாகவும் கட்டி முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.