ஊராட்சிகளில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வலையாம்பட்டு உள்பட 4 ஊராட்சிகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வளர்ச்சிப் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்துள்ளார். அப்போது ஊராட்சிகளில் 100 நாள் வேலைத் திட்டம் நடக்கும் இடத்திற்கு நேரடியாக சென்று பல பணிகளை அவர் பார்வையிட்டுள்ளார்.
இதனையடுத்து ஊராட்சியில் அரசு திட்டப் பணிகளையும் அவர் ஆய்வு செய்துள்ளார். பின்னர் குடிநீர் பிரச்சினை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.