Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மொத்தம் 14 லட்சம்…. தீவிரமாக நடைபெறும் பணிகள்…. ஆட்சியரின் ஆய்வு….!!

வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் ஸ்ரீதர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்டத்திலுள்ள ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித் துறை சார்பாக நடைபெற்று வருகின்ற வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் ஸ்ரீதர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். ஆனால் முன்னதாகவே அத்தியூர் ஊராட்சியில் 17 லட்சம் மதிப்பீட்டில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் திறந்தவெளி கிணறு வெட்டும் பணி மற்றும் புதிதாக அமைக்கப்படும் நீர் உறிஞ்சு குழாய்கள் அமைக்கும் பணி உள்ளிட்டவைகளை அவர் ஆய்வு செய்துள்ளார்.

இதனை அடுத்து கானாங்காடு, கடுவனூர் மற்றும் பாக்கம் புதூர் ஆகிய ஊராட்சிகளில் 15-வது நிதிக்குழு திட்ட பணிகள், புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டும் பணி, ஜல் ஜீவன் மிஷன் பணிகள், புதிதாக வெட்டப்பட்டு வரும் திறந்தவெளி கிணறு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணிகள் ஆகியவற்றை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.

Categories

Tech |