ரஷ்யாவில் வளர்ப்பு மகனை தாயே திருமணம் செய்து கொண்டு வெளியிட்ட பதிவு சமூக வலை தளத்தில் வைரலாகி வருகிறது.
ரஷ்யாவை சேர்ந்தவர் மரினா(35). இவர் உடல் எடை குறைப்பது தொடர்பாக டிப்ஸ் வழங்கும் பணியை செய்து வந்தார். மரினா கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அலெக்ஸ்(45) என்பவரை திருமணம் செய்து கொண்டார். அத்துடன் அலெக்ஸின் ஐந்து பிள்ளைகளையும் தத்தெடுத்து அவர் வளர்த்துள்ளார். இந்நிலையில் தத்து பிள்ளைகளில் ஒருவரான விளாடிமிர்(21) என்பவரை மரினா தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து மரினா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில் அலெக்ஸுடன் தான் நிம்மதியாக வாழ வில்லை என்றும் விளாடிமிர் சிறந்த மனிதராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். விளாடிமிர்- மரினா தம்பதியருக்கு தற்போது குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது. மரினாவின் இந்த முடிவிற்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும் பல பேர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
www.instagram.com/p/CIvo7ywnhJE/