இமாச்சல பிரதேசத்தில் அடுத்த 25 ஆண்டுகளில் மாநிலத்துடைய வளர்ச்சியின் தலைவிதியை தீர்மானிக்கும் இந்த சட்டமன்ற தேர்தல் சிறப்பு வாய்ந்தது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
இமாச்சலப் பிரதேசத்தில் பாஜகவை ஆட்சியில் தக்கவைக்க மக்கள் முடிவு செய்துள்ளதாகவும் மலைப்பகுதியில் விரைவான முன்னேற்றமும் நிலையான ஆட்சியும் அவசியம் என்று அவர் தெரிவித்துள்ளார். மண்டி மாவட்டத்திலுள்ள சுந்தர் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, ” நவம்பர் 12-ஆம் தேதி போடப்படும் வாக்குகள் வரும் 5 ஆண்டுகளுக்கு மட்டுமல்ல, நவம்பர் 12-ஆம் தேதி போடப்படும் ஒவ்வொரு வாக்கும் அடுத்த 25 ஆண்டுகளுக்கான மாநிலத்தின் வளர்ச்சி பயணத்தை வரையறுக்கும் என்பதால் இம்முறை இமாச்சல் தேர்தல் சிறப்பு வாய்ந்ததாகும்.
இங்கு விரைவான முன்னேற்றம் மற்றும் விரைவான ஆட்சியை அடைவது அவசியம் என்று இமாச்சலப் பிரதேச மக்களே, தாய்மார்களே, இளைஞர்களே மற்றும் சகோதரர்களே இதை நன்கு புரிந்து கொள்வார்கள். இதனை அடுத்து பாஜக வளர்ச்சிக்கு அதிக முன்னுரிமை அளிக்கிறது. எனவே இமாச்சல பிரதேசத்திற்க்கு பாஜகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர மக்கள் முடிவு செய்துள்ளனர்.
இமாச்சலப் பிரதேசம் சிறிதாக இருப்பதால் காங்கிரசை எப்போதும் புறக்கணிப்பதாகவும் மூன்று முதல் நான்கு எம்பிக்களை மட்டுமே மக்களவைக்கு அனுப்பவதாகவும் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து ஒன்றாக இணைந்து இமாச்சலப் பிரதேசத்தை முன்னெடுத்துச் செல்வோம் என்றும் புதிய “ரிவாஸ்” ஒன்றை தொடங்கி பாஜகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவோம். மேலும் இரண்டு தடவைகள் ஒரே கட்சி ஆட்சிக்கு அமர்த்தாது என்பதில் வரலாற்றில் உண்டு.
இருப்பினும் மக்களவையில் உள்ள மூன்று அல்லது நான்கு எம்எல்ஏக்களை அந்தக் கட்சி அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதவில்லை. அவர்களின் மனநிலை காரணமாக காங்கிரஸ் ஒருபோதும் இமாச்சலப் பிரதேசத்தின் வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை என்றும் மாநிலம் பின் தங்கியது என்றும் காங்கிரஸ் மோசடி செய்துள்ளது. இதனை அடுத்து காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது பாதுகாப்புத் துறையில் தனது முதல் ஊழலை செய்துள்ளது. மேலும் காங்கிரஸ் பாதுகாப்பு ஒப்பந்தங்களில் எப்போதும் கமிஷன் வாங்கியது. அது மட்டுமல்லாமல் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.