நேற்று காதலர் தினம் உலகமெங்கும் கொண்டாடப்பட்ட நிலையில் பீகார் மாநிலம் பாட்னாவில் காதலர் தினம் கொண்டாடிய நபர் மனைவியிடம் கையும் களவுமாக சிக்கியுள்ளார்.
பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள பைலே சாலையில் தனது கணவரை வேறு ஒரு பெண்ணுடன் பார்த்த மனைவி அவர்களை மடக்கி பிடித்து நடுரோட்டில் கணவர் திட்டி சண்டை போட்டுள்ளார். பின்பு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர் இதில் அவருக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆன நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இருப்பினும் அந்த ஆண் வேறு பெண்ணுடன் காதலர் தினத்தை கொண்டாடியுள்ளார்.
சம்பந்தப்பட்ட 3 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று சமாதானம் செய்தும் அந்த பெண் சமாதானம் ஆகவில்லை. மேலும் பாதிக்கப்பட்ட பெண் கொடுக்கும் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறியுள்ளனர்.