Categories
உலக செய்திகள்

நான் அதை செய்யல…. 2 வருடங்களாக அனுபவித்த கொடுமை…. காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை….!!

12 வயது சிறுவனை 2 வருடங்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்திய இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அமெரிக்க நாட்டிலிருக்கும் டெக்சா என்ற பகுதியில் டாமினிக் அமாடர் என்ற இளைஞர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து 12 வயதுடைய சிறுவனுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் டாமினிக்கை கைது செய்தனர். இதனையடுத்து காவல்துறையினரின் விசாரணையில் தன்னுடைய குற்றத்தை ஒப்புக் கொள்ளாத டாமினிக், பின்னர் சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதை ஏற்றுக் கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து சிறையிலிருக்கும் டாமினிக்கிற்கு ஜாமீன் தொகையாக $1,00,000
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |