கஞ்சா விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முத்துமாரியம்மன் காலனி பகுதியில் சப் இன்ஸ்பெக்டரான செண்பகவேலன் என்பவர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தையும் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதனை அடுத்து கழிவறை அருகில் சந்தேகப்படும் படியாக கருப்பசாமி என்பவர் நின்று கொண்டிருந்தார். இதனைப் பார்த்த காவல்துறையினர் கருப்பசாமி அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.
அதன் பிறகு கருப்பசாமியிடமிருந்த 90 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டரான சிராஜூதீன் என்பவர் பராசக்தி காலனியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் பால்ராஜ் என்பவர் கஞ்சா விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பிறகு பால்ராஜிடமிருந்த 80 கிராம் கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பால்ராஜை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.