சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த துப்புரவு தொழிலாளிக்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மடத்துப்பட்டி பகுதியில் துப்புரவு தொழிலாளியான காளிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் காளிமுத்துவை கைது செய்துள்ளனர்.
மேலும் இந்த வழக்கானது போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்துள்ளது. அதன் பிறகு இந்த வழக்கை விசாரித்த நீதிபதியான தனசேகரன் என்பவர் காளிமுத்துக்கு ஆயுள் தண்டனை மற்றும் 3 ஆயிரம் ரூபாய் பணம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 12 லட்சம் ரூபாய் பணத்தை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதி பரிந்துரை செய்துள்ளார்.