வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பராசக்தி காலனி பகுதியில் கேத்திரபாலன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி வயிற்று வலியால் சிரமப்பட்டு வந்துள்ளார். இதற்காக கேத்திரபாலன் பல மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் இவரது வயிற்று வலி குணமடையவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கேத்திர பாலன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனி அறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அதன் பிறகு கேத்திர பாலனுடைய மனைவியான மணிமாலா சிறிது நேரத்திற்குப் பின்பு வீட்டிற்கு வந்து பார்த்ததும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் கேத்திரபாலனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.