Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மகனை கண்டித்த தந்தை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…..!!

தூக்கிட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் முனியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நித்யானந்தம் என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நித்யானந்தம் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் மது அருந்தி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து  முனியசாமி நித்யானந்தை கண்டித்துள்ளார்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான நித்யானந்தம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனி அறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நித்தியானந்தமின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |