ஜாமினில் வெளிவந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முத்துலிங்காபுரம் பகுதியில் நந்தகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷம் குடித்து நந்தகுமார் தற்கொலை முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் நந்தகுமாரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு மருத்துவர்கள் நந்தகுமாருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நந்தகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.