Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பெட்ரோல் ஊற்றி தாக்குதல்….. வாலிபருக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் நடவடிக்கை….!!

பெட்ரோல் ஊற்றி அண்ணனை கொலை செய்த தம்பியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி பகுதியில் பட்டு நெசவுத் தொழிலாளியான புருஷோத்தமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லாரி டிரைவரான ராஜசேகர் என்ற தம்பி இருக்கின்றார். இவர்கள் இருவருக்கும் இடையே சொத்து பிரச்சினையால் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ராஜசேகரின் இருசக்கர வாகனத்தை புருஷோத்தமன் இரண்டு நாட்களாக பயன் படுத்திவிட்டு வீட்டிற்கு வந்து வைத்துள்ளார்.

அதன்பிறகு புருஷோத்தமன் மற்றும் ராஜசேகருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து புருசோத்தமன் தனியாக வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது ராஜசேகர் அவரின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். இந்த தீ விபத்தில் புருஷோத்தமன் பலத்த காயமடைந்து அலறியுள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டதும் அருகில் உள்ளவர்கள் புருஷோத்தமனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் புருஷோத்தமனுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று புருஷோத்தமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். தற்போது இந்த வழக்கில் புருஷோத்தமனின் தம்பியான ராஜசேகர் தான் பெட்ரோல்  ஊற்றி கொலை செய்து காவல் துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பிறகு காவல்துறையினர் ராஜசேகரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |