இருவரிடையே ஏற்பட்ட தகராறில் உறவினரை கம்பால் தாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாணல்காடு பகுதியில் கைலாசம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கணேசன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கணேசன் மதுபோதையில் தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை அவரது உறவினரான அதே பகுதியில் வசிக்கும் உலகுமுத்து என்பவர் கணேசனை கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கணேசன் உலகுமுத்துவிடம் தகராறில் ஈடுபட்டு அவரை கம்பால் தாக்கியுள்ளார். இது குறித்து உலகுமுத்து முறப்பநாடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கணேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.