பெட்டிக் கடையில் பெட்ரோல் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாரனேரி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு பெட்டிக் கடையில் பெட்ரோல் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த பெட்டிக் கடையின் உரிமையாளரான மகேஷ்குமார் என்பவரிடமிருந்த 3 லிட்டர் பெட்ரோலை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மகேஷ்குமாரைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.