Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இதற்கு அனுமதி கிடையாது….. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தாயில்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அப்பகுதியில் வசிக்கும் ரமேஷ் என்பவரின் வீட்டில் சட்டவிரோதமாக 30 கிலோ சரவெடி இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன் பிறகு காவல் துறையினர் ரமேஷிடமிருந்து 30 கிலோ சரவெடியை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரமேஷை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |