பணம் பறித்த குற்றத்திற்காக 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர்.நகரில் காளிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் டிரைவராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் காளிராஜ் நேரு காலனி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த வீராஈஸ்வரன் மற்றும் முனியசாமி இருவரும் காளிராஜிடம் கத்தியை காட்டி அவரிடமிருந்த 370 ரூபாய் பணத்தை பறித்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து காளிராஜ் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஈஸ்வரன் மற்றும் முனியசாமி ஆகியோரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.