தொழிலாளியை தாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புல்லலக்கோட்டை பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இதனை அடுத்து அதே பகுதியில் செல்லப்பாண்டி என்பவரும் வசித்து வருகிறார். இவர்கள் இருவரும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் செல்லப்பாண்டி பெருமாளே அவதூறாக பேசியதோடு அவரை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் பெருமாளின் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து பெருமாள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் செல்லபாண்டியை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.