பட்டாசுகளை பதுக்கி வைத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மீனம்பட்டி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு கடையின் முறையான அனுமதியின்றி பட்டாசுகள் பதுக்கி வைத்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து தென்னரசு என்பவரிடம் இருந்த பட்டாசுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த தென்னரசுவை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.