Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பதுக்கி வைக்கப்பட்ட பட்டாசு பெட்டிகள்…. காவல் துறைக்கு கிடைத்த ரகசிய தகவல்…. பறிமுதல் செய்த போலீசார்….!!

அனுமதியின்றி பட்டாசு பெட்டியை பதுக்கி வைத்திருந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாரைப்பட்டி கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் பட்டாசு கடை வைத்து நடத்தி வருகின்றார். இவர் உரிய அனுமதியின்றி 20 பெட்டி பட்டாசுகளை பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சப்-இன்ஸ்பெக்டரான ராமநாதன் என்பவர் கடையில் சோதனை செய்துள்ளார். இதனை அடுத்து காவல்துறையினர் அங்கு வைத்திருந்த 20 பட்டாசு பெட்டிகளை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கண்ணனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |