சட்டவிரோதமாக மது விற்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர்.
அதன்பிறகு அதே பகுதியில் வசிக்கும் மாரிராஜ் என்பவரை மடக்கிப் பிடித்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனை அடுத்து அவரிடமிருந்த 12 மது பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாரிராஜ் என்பவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.