Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தனியாக இருந்த மூதாட்டி…. கொலை மிரட்டல் விடுத்த மூவர்…. போலீஸ் விசாரணை…!!

தனியாக இருந்த மூதாட்டியை தாக்கிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விஜயலட்சுமி காலனி பகுதியில் பாலசுப்பிரமணியம் – ராமுத்தாய் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த ராமுத்தாயிடம் அதே பகுதியில் வசிக்கும் சங்கர் கணேஷ், மணிகண்டன் மற்றும் மணிகண்டபிரபு ஆகியோர் தகராறு செய்துள்ளனர். இதனை அடுத்து மூவரும் இணைந்து வீட்டின் கதவுகள் மற்றும் இருசக்கர வாகனத்தை அடித்து உதைத்ததோடு, ராமுத்தாய்க்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.

இது குறித்து ராமுத்தாய் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கணேஷ், மணிகண்டன் மற்றும் மணிகண்டபிரபு ஆகியோரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து சங்கர் கணேஷ் ராமுத்தாயின் மகனான தங்கபாண்டியன் மீது புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |