கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக 2 – பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் கழிப்பிடம் அருகே சந்தேகத்தின் அடிப்படையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனை அடுத்து காவல்துறையினர் அவர்களை அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது அவர்கள் பராசக்தி காலனி பகுதியில் வசிக்கும் பாடலிங்கம், சந்தோஷ்குமார் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்களை சோதனை செய்த காவல்துறையினர் அவர்களிடம் 115 கிராம் கஞ்சா இருந்ததை கண்டுபிடித்துள்ளனர். அதன்பிறகு அவரிகளிடமிருந்த கஞ்சா மற்றும் 900 ரூபாய் பணத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.