இருசக்கர வாகனத்தில் மணல் கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் மணல் கடத்துவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் ராஜபாளையம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை தீவிரமாக சோதனை செய்துள்ளனர்.
இதனை அடுத்து இரு சக்கர வாகனத்தை சோதனை செய்தபோது சமத்துவபுரம் பகுதியில் வசிக்கும் முத்துவீரன் என்பவர் மூட்டைகளாக கட்டி மணல் கடத்தியது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பிறகு முத்துவீரனிடமிருந்து மணல் மற்றும் இருசக்கர வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முத்துவீரனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.