முன்விரோதம் காரணமாக தாக்குதல் நடத்திய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எம்.ரெட்டியபட்டி கிராமத்தில் ராஜபால் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2012 – ஆம் ஆண்டு திருத்தங்கல் பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் ராஜகோபாலுக்கு தொடர்பு இருந்துள்ளது. இந்நிலையில் ராஜபாலுக்கும் அதே பகுதியில் வசிக்கும் கருப்பசாமி என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனை அடுத்து ராஜபால் சாலையில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த அருண்குமார், கருப்பசாமி, பிரசன்னா ஆகியோர் ராஜபாலனை சரமாரியாக இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர்.
இதில் ராஜபாலனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் ராஜபாலனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து ராஜப்பாலனின் மனைவியான கனகரத்தினம் என்பவர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 2 பேரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.