சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரித்த வாலிபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெற்றிலையூரணி பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரிப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர சோதனை செய்துள்ளனர்.
அதே பகுதியில் வசிக்கும் புனிதராஜ் மற்றும் நாராயணன் ஆகியோர் சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரித்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பிறகு இருவரிடமிருந்த 30 கிலோ சர வெடியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் புனிதராஜ் மற்றும் நாராயணன் ஆகியோரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.