Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இளம் பெண்ணுக்கு நடந்த கொடூரம்….. ஆசை வார்த்தைகள் கூறிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…..!!

திருமணம் செய்து கொள்வதாக கூறிய வாலிபர் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராமமூர்த்தி பகுதியில் கவியரசு என்பவர் சொந்தமாக கட்டுமான நிறுவனம் வைத்துள்ளார். இவருக்கு மகேந்திரன் என்ற நண்பன் இருக்கின்றார். இந்நிலையில் 21 – வயது மிக்க இளம் பெண்ணுடன் கவியரசனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கமானது காதலாக மாறியுள்ளது. அதன்பிறகு கவியரசன் அந்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி தனியார் விடுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனை அடுத்து அந்த இளம்பெண்ணை கவியரசு ஆபாசமாக படம் பிடித்து வைத்து மிரட்டியுள்ளனர். அதன் பிறகு அந்த இளம்பெண் கவியரசனின் தந்தையான வெங்கடேஷிடம் திருமணம் குறித்து பேசியுள்ளார். இதற்கு வெங்கடேஷ் அந்த இளம்பெண்ணிடம் முறையாக பதிலளிக்காமல் அவதூறாக பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளம் பெண் இது குறித்து காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |