Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“வாலிபர் கொலை வழக்கு” வசமா சிக்கிய சிறுவன்…. போலீஸ் நடவடிக்கை….!!

வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒரு சிறுவனை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சேலம் மாவட்டத்திலுள்ள கிச்சிப்பாளையம் காளிக்கவுண்டர் காடு பகுதியில் வினோத் குமார் என்பவர் வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் வினோத்குமார் மற்றும் அவருடைய நண்பர்களை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டியது. இதனால் படுகாயமடைந்த வினோத்குமார் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த கொலை தொடர்பாக ஏற்கனவே அதிமுக நிர்வாகிகள்  உட்பட 22 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் இந்த கொலையானது பழிக்குப்பழியாக நடந்தது என்பது காவல்துறையினருக்கு தெரியவந்தது.

இதனையடுத்து கொலையில் தொடர்புடைய கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 18 வயது சிறுவனை காவல்துறையினர் பல்வேறு இடங்களில் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் அந்த சிறுவனை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர். இவ்வாறு வாலிபர் கொலை வழக்கில் மொத்தம் 23 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருசிலர் மீது சில வழக்குகள் இருப்பதால் அவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |