வாலிபரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு பகுதியில் தேவதாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலாஜி என்ற மகன் உள்ளார். இவர் மீது கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளதால் அவரை காவல்துறையினர் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பாலாஜியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளார். அந்த பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் பாலாஜியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் பாலாஜியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான ஆணையை பாளையங்கோட்டை சிறை அதிகாரிகளிடம் வழங்கினர்.