Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற வாலிபர்…. தாய் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை….!!

வேலைக்கு செல்வதாக கூறி சென்ற வாலிபர் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சந்தையடியூர் பகுதியில் ராமக்கனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில் இருவருக்கு திருமணமாகி தனித்தனியாக வசிக்கின்றனர். மேலும் கடைசி மகனான மோகன்ராம் என்பவருக்கு திருமணம் ஆகவில்லை. அவர் சென்னையில் மளிகை கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மோகன்ராம் கடந்த 2020-ஆம் ஆண்டு கொரோனா தொற்று காரணமாக சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளார். அதன்பின் உடன்குடியில் லோடுமேனாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் மோகன்ராம் கடந்த டிசம்பர் 21-ஆம் தேதி வேலைக்கு செல்வதாக வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால்  இன்றுவரை வீட்டிற்கு மோகன்ராம் திரும்பி வரவில்லை. இதனால் மோகன்ராமின் குடும்பத்தினர் உறவினர் வீடு, நண்பர்கள் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மோகன் ராமின் தாய் ராமக்கனி குலசேகரப்பட்டணம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சுமார் 16 நாட்களாக மாயமான வாலிபர் பற்றி எந்தவித தகவலும் கிடைக்காததால் மோகன்ராமின் குடும்பத்தினர் சோகத்தில் உள்ளனர்.

 

Categories

Tech |