Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தப்பு பண்ணா இப்படிதான்…. குண்டர் சட்டம் பாய்ந்தது…. மாவட்ட ஆட்சியரின் உத்தரவு….!!

வாலிபரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல்துறையினர் மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரை செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்லிடைக்குறிச்சி பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இசக்கிபாண்டி என்ற மகன் உள்ளார். இந்நிலையில் இசக்கிபாண்டி மீது காவல்நிலையத்தில் திருட்டு, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இதனால் இசக்கிபாண்டியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் மற்றும் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் இசக்கிபாண்டியால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

எனவே காவல்துறையினர் இசக்கிபாண்டியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தனர். இதனை மாவட்ட ஆட்சியர் ஏற்றுக்கொண்டு இசக்கிபாண்டியை குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்க உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி பாளையங்கோட்டை சிறை அதிகாரியிடம் உத்தரவு அறிக்கையை வழங்கியுள்ளார்.

Categories

Tech |