சிறுமியிடம் தவறாக நடக்க முயற்சி செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சமத்துவபுரம் பகுதியில் விஜூ என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நள்ளிரவில் புகுந்து தூங்கிக்கொண்டிருந்த 16 வயதான சிறுமியிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து சிறுமி கூச்சலிட்டுள்ளார். அந்த சத்தம் கேட்டு வீட்டில் இருந்த சிறுமியின் தாயார் மற்றும் சகோதரர்கள் எழுந்து பார்த்துள்ளனர்.
அப்போது விஜூ அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விஜூவை கைது செய்துள்ளனர்.