Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. பெற்றோர் அளித்த புகார்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சிக்கினாபுரம் தண்ணீர்பந்தல் பகுதியில் பூபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் மெக்கானிக் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் பூபதி தனது உறவுக்கார பெண்ணான அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பழகி வந்துள்ளார். இதனையடுத்து பூபதி சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதனையறிந்த சிறுமியின் பெற்றோர் தாராபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் பூபதியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |