பிளேடால் தனது கழுத்தை அறுத்து கொண்ட வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஒத்தப்பட்டி பகுதியில் பால்பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதன் காரணத்தினால் மனைவி இவரை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். அதன்பிறகு பால்பாண்டி தனது தாயாருடன் வசித்து வந்துள்ளார். இதனை அடுத்து பால்பாண்டி கடும் நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் பால்பாண்டி திடீரென பிளேடால் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பால்பாண்டியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.