மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் டீசல் ஊற்றி தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காந்திபுரம் பகுதியில் காசித்துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கடந்த 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் முடிந்து அஸ்மிதா, வனபார்வதி என்ற 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் கோவையில் வசித்து வந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் சங்கீதா தனது கணவனை பிரிந்து சென்றுவிட்டார்.
இதனால் காசித்துரை தனது 2 குழந்தைகளையும் அவரது பெற்றோரிடம் விட்டுள்ளார். இந்நிலையில் காசித்துரை திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் மனைவி பிரிந்து சென்றதால் தனது உடலில் டீசல் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். இதனையடுத்து அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர். அதன்பின் காசித்துரையை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த திருச்செந்தூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.