Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

தனக்கு பதிலாக வேறு ஒருவர்…. வாலிபர் தீக்குளிக்க முயற்சி…. திருவாரூரில் பரபரப்பு….!!

கலெக்டர் அலுவலக வளாகத்தில் வாலிபர் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த வாலிபர் ஒருவர்  வளாகத்தில் நின்று திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணை பாட்டிலை எடுத்து தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் ஓடி வந்து அந்த வாலிபரை தடுத்து நிறுத்தி மண்ணெண்ணை பாட்டிலை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில் அவர் நீடாமங்கலம் தென்கரைவாசல் பகுதியில் வசிக்கும் பூபாலன் என்பதும், கடந்த 3 ஆண்டுகளாக இந்த மாவட்டத்தில் வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் தொழில்நுட்ப உதவியாளராக வேலை பார்த்து வந்ததும் காவல்துறையினருக்கு தெரிவந்துள்ளது. மேலும் தற்போது பூபாலன் பணி நிரந்தரம் செய்யப்படும் நிலையில் தனக்கு பதிலாக வேறு ஒருவர் இந்த பணியில் ஈடுபட்டதால் மனமுடைந்து தீக்குளிக்க முயற்சி செய்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் பூபாலனை தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Categories

Tech |