Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வாழ்க்கையில் விரக்தியடைந்த வாலிபர்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சுத்தமல்லி பகுதியில் அருணாச்சலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகலிங்கம் என்ற மகன் இருந்துள்ளார். இவர் லோடு ஆட்டோவில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நாகலிங்கம் செல்போனில் அதிக நேரம் பேசி வந்துள்ளார். இதனை அவருடைய தாய் ராஜலட்சுமி கண்டித்துள்ளார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த நாகலிங்கம் தனது வீட்டின் மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நாகலிங்கத்தின் பெற்றோர் சுத்தமல்லி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் நாகலிங்கத்தின் சடலத்தை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |