வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஓட்டப்பிடாரம் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு இந்திராணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு தினேஷ், மோனிஷா என்ற 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சுப்பிரமணியன் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுப்பிரமணியனின் உடலை உடனடியாக கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.