Categories
Uncategorized தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தொழிலில் ஏற்பட்ட நஷ்டம்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தொழில் நஷ்டம் காரணமாக வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருள்குமரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் பிலிம் டெக்னாலஜி படித்து முடித்துவிட்டு திருச்செந்தூரில் ஜவுளி கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இதில் அவருக்கு ரூ.15 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் அருள்குமரன் விரக்தியில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் தனது அறையில் தூங்க சென்ற அருள்குமரன் மதியம் வரை வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அவரது தாயார் நாகரத்தினம் அறையின் கதவை திறந்து பார்த்தபோது அருள்குமரன் மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த திருச்செந்தூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அருள்குமரனின் உடலை உடனடியாக கைப்பற்றி திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |