வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளம் பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெத்துராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 2 வருடங்கள் ஆகிறது. இவர் ரூ.3 லட்சம் கடனில் இருந்து வந்துள்ளார். இதனால் பெத்துராஜ் கடனை அடைக்க முடியாமல் பெத்துராஜ் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் பெத்துராஜ் வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைப் பார்த்த பெத்துராஜின் உறவினர்கள் அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் அவரை உடனடியாக மீட்டு குளத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
ஆனால் பெத்துராஜை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த சூரங்குடி காவல்துறையினர் பெத்துராஜின் உடலை உடனடியாக கைப்பற்றி விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த சூரங்குடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.